2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ரூ. 20 மில்லியன் பெறுமதியான சிகரெட் கைப்பற்றல்

Editorial   / 2019 பெப்ரவரி 01 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.கே.ஜி.கபில

 

சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெ ளிநாட்டுச் சிகரெட்டுகள் அடங்கிய பொதிகள் சிலவற்றை, கொழும்பு போதையொழழிப்பு பொலிஸ் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

இந்தப் பொதிகளில், டுபாய் நாட்டில் தயாரிக்கப்பட்ட “ப்ரைய்ட்” என்றழைக்கப்படும் 4 இலட்சம் ​சிகரெட்டுகள் காணப்பட்டதாகவும் இவை, கொழும்புத் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு, லொறியொன்றில் ஏற்றிச் செல்லப்படும் போது, கொழும்பு - கோட்டை மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் வைத்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

குறித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, இந்த சிகரெட்டுகளை இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ள வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .