2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ரோஹிதவின் வழக்கு ஒத்திவைப்பு

Thipaan   / 2017 ஜூலை 03 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதியமைச்சரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கின் வழக்கு விசாரணை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் 3ஆம் திகதிகளுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால், ஒத்திவைக்கப்பட்டது.

41.2 மில்லியன் ரூபாய் சொத்துக்களைச் சட்டவிரோதமாகச் சேர்த்துள்ளார் என்று, ரோஹித்த எம்.பிக்கு எதிராக, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கணினிச் சாட்சியங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு, தனியார் வங்கியொன்று தமக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, மன்றில் கோரினார்.

கணினிச் சாட்சியங்களை ஆராய்வது தொடர்பில் வங்கிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஓகஸ்ட் மாதம் 2ஆம் 3ஆம் திகதிகளுக்கு ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .