2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ரூ.2 கோடியுடன் பெண் கைது

Kanagaraj   / 2015 நவம்பர் 21 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் கடுவலையைச் சேர்ந்த 50 வயதான பெண்ணொருவர்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹொங்கொங் நோக்கி செல்வதற்கா விமான நிலையத்துக்கு இன்று சனிக்கிழமை அதிகாலை வந்திருந்த போதே அவர், 12.48க்கு கைது செய்யப்பட்டதாக சுங்கப் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயங்களின் இலங்கைப் பெறுமதி 2 கோடியே 82 இலட்சத்து 57 ஆயிரத்து 645 ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பயணப் பொதியில் 35,700 ஸ்ரேலிங் பவுன்ஸ், 44,170 அமெரிக்க டொலர்கள், தலா ஒரு இலட்சம் நோர்வே மற்றும் டென்மார்க் நாணயங்கள், 30,100 யூரோக்கள்;, சுவிஸ் பிரேங்க், சவூதி அரேபியா, கனடா மற்றும் கொரியா நாடுகளின் நாணயங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X