2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ராஜபக்ஷ- நிஷங்க உறவு படங்களுடன் அம்பலம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தர்ஷன சன்ஜீவ

நிதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் அவன்காட் தலைவர் நிஷங்க சேனாதிபதியும், கலிபோர்னியா டிஸ்ஸினி லாண்டில் விடுமுறையை உல்லாசமாக களிக்கும் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பல புகைப்படங்களை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நேற்று காட்டினார்.

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் சேனாதிபதியும் நெருங்கிய நண்பர்கள் என்பதைக் காட்ட போதிய சான்றுகள் உள்ளதாகவும், இதனால்தான் அவன்ட் காட் நிறுவனத்தைக் காப்பாற்ற அமைச்சர் முயல்வதாகவும் அவர் கூறினார்.

'இவர்கள் இருவரும் நண்பர்கள் என நாம் முன்னர் கூறியபோதும், அமைச்சர் அதை மறுக்கவில்லை. இந்தப் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல எனக் கூறும்படி அவருக்கு நாம் சவால் விடுகின்றோம்' என அவர் கூறினார்.

நீதியமைச்சர் உட்பட  ஒரு சிலர், அவன்ட் காட் கம்பனியை காப்பாற்ற முயல்கின்றனர். ஆனால் ஜனவரி 8 அமைதிப் புரட்சிக்கு வழிவகுத்தவர்கள் கம்பனி பற்றி உண்மையை பேசுகின்றனர்.

நிஷங்க சேனாதிபதியுடன் தொடர்ந்து இருப்பதாகக் கூறப்படுவதையும் அவரிடமிருந்து பணம் பெற்றதாக கூறப்படுவதையும் பொன்சேகா நிராகரித்திருந்தார்.

' நாம் ஒரு முறைதான் தொலைபேசி மூலம் பேசினோம். அவர் எனக்கு 30 மில்லியன் ரூபாய் தருவதாகக் கூறுவது உண்மையல்ல. நான் ஏனையோரிடம் பணம் வாங்குபவனாக இருப்பின், ஜனாதிபதித் தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு கொடுக்க முன்வந்த இரண்டு பில்லியன் ரூபாவையும், 100 ஏக்கர் தென்னந்தோப்பையும் வாங்கியிருப்பேன்' என அவர் கூறினார்.

அவன்ட் காட் நிறுவனத்தைக் காப்பாற்ற முயல்வதாகக் கூறப்படுவதால், சட்டமா அதிபருக்கு எதிராக தான், சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சரத் பொன்சேகா கூறினார். இதற்காகத் தகவல்களை திரட்டி வருவதாக அவர் கூறினார்.

நீதியமைச்சரும் சட்டமா அதிபரும் இணைந்து, அவன்ட் காட் நிறுவனத்தையும் நிஷங்க சேனாதிபதியும் பாதுகாத்து வருகின்றனர்.
'சட்டமா அதிபர், அடுத்த மாதம் ஓய்வுபெறவுள்ளார். இவர் சட்டத்தை அமுலாக்கத் தவறியதால் இவர் இளைப்பாறியதும், கைதாவதை நாம் உறுதிப்படுத்துவோம்.' என அவர் கூறினார்.

முன்னாள் சட்ட ஒழுங்கு அமைச்சர், அவன்ட் காட் விடயத்தில் ஒரு பிழை விட்டார். ஆனால், தனது பிழையை கனவான் போல ஏற்றுக்கொண்டார். என சரத்பொன்சேகா கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X