Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இடையிலான உறவு சர்ச்சை, இணையத்தில் வைரலாகி வரும் லிஃப்ட் புகைப்படங்களால் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
இருவரும் நெருக்கமாக, உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படும் இந்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
இந்த விவகாரம், ஆண்கள் சமூகத்தின் இரட்டைத் தரத்தை மையமாகக் கொண்டு சமூகத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ், ஏற்கனவே திருமணமானவர் என்று அறிந்தும், அவரது புகழ் மற்றும் செல்வத்தின் மீது ஆசைப்பட்டு ஜாய் கிரிஸில்டா அவரை கவர்ந்ததாக சமூகம் முதலில் குற்றஞ்சாட்டியது. ஆனால், ஜாய் தனது தரப்பு நியாயங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்த பிறகு, பொதுமக்களின் கருத்து மாறத் தொடங்கியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ், ஏற்கனவே திருமணமானவர் என்று அறிந்தும், அவரது புகழ் மற்றும் செல்வத்தின் மீது ஆசைப்பட்டு ஜாய் கிரிஸில்டா அவரை கவர்ந்ததாக சமூகம் முதலில் குற்றஞ்சாட்டியது. ஆனால், ஜாய் தனது தரப்பு நியாயங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்த பிறகு, பொதுமக்களின் கருத்து மாறத் தொடங்கியுள்ளது.
முன்னதாக, ஜாய் வெளியிட்ட வீடியோவில், ரங்கராஜ் அவரை "ஓய் பொண்டாட்டி" என அழைத்து பேசுவது பதிவாகியிருந்தது, இது பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியது.
#JusticeForJoy என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்ட் ஆக, "ரங்கராஜ் தனது செயல்களுக்கு பதில் அளிக்க வேண்டும்" என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரங்கராஜ், ஜாயின் குற்றச்சாட்டுகளை மறுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது 'மாதம்பட்டி பாகசாலா' நிறுவனத்திற்கு எதிரான கருத்துகளுக்கு தடை கோரிய மனு, செப்டம்பர் 16-ம் தேதி வரை ஜாயிடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ரங்கராஜ் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
"விவாகரத்து இல்லாமல் உறவு வைத்த ஆணை விட, பாதிக்கப்பட்ட பெண்ணை மட்டும் குறை சொல்லும் இந்த சமூகம் மாற வேண்டும்," என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜாய், "கர்மா பதில் சொல்லும்" என விஜய்யின் 'மெர்சல்' வசனத்தை மேற்கோள் காட்டி பதிவிட்டு, தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.இந்த சர்ச்சை, தமிழ் சினிமா மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago