2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

’லொக்கு பெட்டி’க்கு உதவிய கப்புறாளை கைது

Editorial   / 2025 ஒக்டோபர் 16 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான 'லொக்கு பெட்டி' என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமாரவின் முக்கிய உதவியாளர் ஒருவர் அம்பலாங்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொடை பகுதியிலுள்ள விகாரையொன்றில் கப்புறாளையாக செயற்பட்ட ஒருவரே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லொக்கு பெட்டியின் உதவியாளர்கள் 36 பேர் போதைப்பொருள் கடத்தலூடாக ஈட்டிய 33 கோடியே 66 இலட்சம் ரூபாய் குறித்த சந்தேகநபரின் வங்கி கணக்கில் வைப்பில் இட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் ஊடாக லொக்கு பெட்டியின் ஆலோசனைக்கமைய குறித்த பணத்தை  பல்வேறு கடத்தல்களுக்காக மேலும் மூவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

லொக்கு பெட்டி தற்போது பூஸ்ஸ அதிபாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .