2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

லிப்ட்டுக்குள் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Editorial   / 2018 டிசெம்பர் 29 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள களியாட்ட விடுதியின் லிப்ட் உடைந்து விழுந்தத்தில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம்,  இன்று (29) அதிகாலை 1.50 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பத்தரமுல்ல, தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான கோகில சமந்தபெரும என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில், மேலும் இருவர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொம்பனித் தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .