R.Tharaniya / 2025 ஒக்டோபர் 02 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரத்தனபிட்டிய, சூரிய மல் மாவத்தையில் கழிவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியை செலுத்தி வந்த சாரதியுடன் கால்வாயில் கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் பொரலஸ்கமுவ, திவுலபிட்டிய,சூரிய மல் மாவத்தையைச் சேர்ந்த கே. டட்லி ஆனந்த (51) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் கட்டிடங்களை இடிப்பது உட்பட பல்வேறு வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்,
மேலும் நுகேகொட கம்சபா சந்தி பகுதியில் ஒரு கட்டிடத்தை இடித்ததில் இருந்து கழிவுகளை டிப்பர் லொறியில் ஏற்றி வேலை முற்றத்திற்கு கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை (1) அதிகாலை வேலை முற்றத்தில் இருந்து டிப்பர் லொறியை பின்னோக்கி செலுத்தும் போது திடீரென விபத்து ஏற்பட்டது, அது திடீரென கவிழ்ந்து அருகில் உள்ள கால்வாயில் விழுந்ததால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago