2025 மே 02, வெள்ளிக்கிழமை

வாக்காளர் அட்டைகள் மீட்பு: ஆளும் கட்சி ஆதரவாளர் கைது

Editorial   / 2025 மே 01 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஒரு தொகை வாக்காளர் அட்டைகள்  மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆளும் கட்சி வேட்பாளர் ஒருவரின் சகோதரனும், தபால் ஊழியர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம், செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

  பூந்தோட்டம் பகுதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றில் ஒரு தொகை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குரிய வாக்காளர் அட்டைகள் இருப்பதாக தேர்தல் திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளது,   

சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அங்கிருந்து ஒரு தொகை வாக்காளர் அட்டைகளை மீட்டுள்ளனர்.

இதேவேளை, அதனை உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக வியாபார நிலையத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அந்தப்பகுதிக்குரிய தபால் ஊழியரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட வியாபார நிலைய உரிமையாளரின் சகோதரன்,தேசிய மக்கள் சக்தியின், வவுனியா மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் என் பது குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X