S.Renuka / 2026 பெப்ரவரி 02 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு, வீடாகச் செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாதெனவும் குறிப்பிட்டுள்ளது.
தமது வீட்டின் செல்லுபடியான வாக்காளர் பெயர்ப்பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் 2026ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டிய புதிய பெயர்கள் தொடர்பான தகவல்களை கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் வழங்குமாறும் அனைத்து வாக்காளர்களிடம் தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் இரண்டு மாத காலத்துக்கு முன்னெடுக்கப்படுவதுடன், அதன் பின்னர் உரிய தகவல்களை உள்ளடக்கிய பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தல், உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக மேற்படி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க அந்த அறிவித்தல் வெளியாகி 28 நாட்களுக்குள் உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்குமாறும் 2026ஆம் ஆண்டு திருத்தத்தின்போது தகைமைகளை பூர்த்தி செய்திருந்தும் ER படிவத்தில் பெயரை உள்ளடக்க முடியாமல் போன நபர்களுக்கு இந்தக் காலப்பகுதியில் உரிமை கோரல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
மேலும், 2026ஆம் ஆண்டு பெயர்ப்பட்டியலுக்கு தகுதியற்ற ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பின், அது தொடர்பில் ஆட்சேபனை தெரிவிப்பதற்கும் இந்த காலப்பகுதியில் சந்தர்ப்பம் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடமிருந்தோ அல்லது மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்தது.
6 minute ago
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
24 minute ago
2 hours ago