J.A. George / 2021 மார்ச் 31 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் உள்ள நபர்களின் வங்கி கணக்குகளின் ஊடாக மோசடியான முறையில் இலங்கையில் உள்ள நபர்களின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பும் குழுவை சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வசித்த 41 வயதுடைய நபர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் மாத்திரம் 14 கோடி ரூபாய் பணம் இவ்வாறு மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வெளிநாடுகளில் உள்ள நபர்களின் வங்கி கணக்குக்குள் இணையம் ஊடாக நுழைத்து பணத்தை இலங்கையில் உள்ள நபர்களின் கணக்குக்கு மாற்றுகின்றனர்.
பின்னர் இலங்கையில் உள்ள வங்கி கணக்கின் உரிமையாளருக்கு சிறிதளவு பணத்தை கொடுத்த தாம் அனுப்பிய பணத்தினை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த மோசடி இடம்பெற்று வருகின்றது” என அவர் சுட்டிக்காட்டினார்.
7 minute ago
50 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
50 minute ago
57 minute ago
1 hours ago