Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வென்னப்புவ பகுதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் கொள்ளையிடத் திட்டமிட்ட குறித்த வங்கியின் முகாமையாளர் உள்ளிட்ட ஐவர் வென்னப்புவ பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், தனது வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைப்பதற்கு, இனந்தெரியாத நபர்கள் முயன்றுள்ளனர் என்று, வங்கியின் முகாமையாளரால் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தலைமறைவாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
இதன் பின்னரே, குறித்த வங்கியின் முகாமையாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர்.
பாரிய கடன் பிரச்சினையில் சிக்கியுள்ள குறித்த வங்கி முகாமையாளர், தன்னுடைய கடனிலிருந்து விடுபடுவதற்காகவே இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
15 minute ago
31 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago
1 hours ago
4 hours ago