2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

வெசாக் உற்சவம் குறித்து அரசாங்கத்தின் தீர்மானம்

Janu   / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை வெசாக் வாரத்தைக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் வழிகாட்டலில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் பௌத்த விவகார திணைக்களம் என்பன மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வெசாக் விழாவை நாடளாவிய ரீதியில் விமர்சையாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

மே மாதம் 27ஆம் திகதி மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன விகாரையில் அரச வெசாக் உற்சவம் நடைபெறவுள்ளது.

அரச வெசாக் உற்சவம் மற்றும் அதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள வெசாக் வாரத்தின் ஏனைய நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

  • மே 27: வெசாக் வார ஆரம்ப நிகழ்வுகள்.
  • மே 28: "ஆரோக்கியமான வாழ்க்கை" எனும் கருப்பொருளில் நிகழ்ச்சிகள்.
  • மே 29: விழுமியங்களை மேம்படுத்தும் (சாராம்ச) நிகழ்ச்சிகள்.
  • மே 30: சீல பாவனா புண்ணிய கருமங்கள்.
  • மே 31: பிக்குகள் மற்றும் சில மாதாக்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகள்.
  • ஜூன் 01: சமய அபிவிருத்தி நிகழ்ச்சிகள்.
  • ஜூன் 02: "சுத்தமான இலங்கை" (Clean Sri Lanka) திட்டத்திற்கு இணையாக சூழல் பாதுகாப்பு மற்றும் சிரமதான நிகழ்வுகள்.

வெசாக் வாரத்தில் இந்த நிகழ்ச்சிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .