2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

விசேட சுற்றிவளைப்பில் 475 பேர் கைது

Freelancer   / 2025 மே 24 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 178 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 131 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 158 பேரும், மதனமோதக போதைப்பொருளுடன் 03 பேரும், கஞ்சா செடிகளுடன் 05 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 208 கிராம் 870 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 289 கிராம் 962 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 118 கிராம் 761 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 26 கிராம் 400 மில்லிகிராம் மதனமோதக போதைப்பொருளும், 9072 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X