2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வசனத்தில் மட்டுமே உள்ளது

Editorial   / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-காஞ்சன குமார ஆரியதாஸ 

அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பது வசனத்தில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாஸ, அதனைச் செயற்பாட்டு ரீதியில், முன்னெடுப்பதே தன்னுடைய நோக்கமாகும் என்றார்.   முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது முறைமைகளில், மதங்களைப் பாதுகாப்பதற்கும், பௌத்த தர்மத்தின் நலனுதவிக்காக, அர்ப்பணிப்பேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  

தம்புள்ளை, ரங்கி விஹாரையின் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல், அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

புனித மகா சங்கத்தினரின் அறிவுரைகள் மற்றும் போதனைகளின் பிரகாரம் அடுத்தகட்ட அபிவிருத்தி நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் என்றும் அவற்றை முறையாக மற்றும் துல்லியமான முறைமையில் முன்னெடுப்பததே தன்னுடைய எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

தொல்பொருள்கள் இருக்குமென இனங்காணப்பட்ட பிரதேசங்களை கலாசார முக்கோண வலயங்களாக்கிப் பாதுகாத்து, அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .