Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 01 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி பொது தராதரப் பத்திர உயர்தர பரீட்சையின் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியை பெறும் சகல மாணவர்களுக்கும் உயர் கல்விக்கான வசதி செய்யப்படும் என, தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் வடக்கு - கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தொழில்நுட்ப மற்றும் உயர் கல்வி நிலையங்கள் பல்கலைக்கழக கல்லூரிகளாக தரமுயர்த்தப்பட்டு இதன் மூலம் இப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இதற்கான வசதி செய்தி கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“இந்த ஆண்டில் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டை மேம்படுத்தும் சுபீட்சம் மிக்க தொலைநோக்கு என்ற எண்ணக்கருவுக்கு அமைய இந்த கல்வி மேம்பாட்டு திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது” என்றார்.
“மலையகத்தில் தொண்டமான் கல்வி நிலையமும் பல்கலைக்கழக கல்லூரியாக மேம்படுத்தப்படுமா?” என்று அமைச்சரிடம் கேட்ட போது, “இது தொடர்பில் இன்னும் கவனம் செலுத்தப்படவில்லை இருப்பினும் மலையக மாணவர் உயர்கல்விக்காக பல்கலைகழக கல்லூரிகள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.
அத்துடன், “மனித வளத்தினை பயன்படுத்தி, கடந்த வருடத்தை விடவும் அதிக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக் கொள்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், பல்கலைக்கழக கல்லூரிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago