Editorial / 2025 டிசெம்பர் 24 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு (பட்ஜெட்) பிறகு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டதால், பாராளுமன்ற செலவு குறைந்துள்ளதாக அறியமுடிகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்டகால விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 40 மில்லியன் ரூபாய் மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
உணவு, மின்சாரம் மற்றும் நீர் விநியோக செலவுகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் குறைவதால் இந்தத் தொகை சேமிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22, 23, 24 மற்றும் 26 ஆகிய திகதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டாய வார இறுதி நாட்கள் உட்பட ஊழியர்கள் பெறும் தொடர்ச்சியான விடுமுறைகளின் எண்ணிக்கை ஒன்பது ஆகும்.
இதற்கிடையில், 19 ஆம் திகதிக்குப் பிறகு ஜனவரி 6 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago