2024 மே 18, சனிக்கிழமை

வாட்ஸ்அப்பில் தகவல் பகிர்ந்தோர் கைது

Simrith   / 2024 மே 15 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காகக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கண்காணித்து குற்றவாளிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படும் இருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் கணினி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நேற்று (14) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெய்யந்தர பிரதேசத்தைச் சேர்ந்த  23 மற்றும் 30 வயதுடைய இரண்டு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .