Freelancer / 2024 டிசெம்பர் 10 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஹாலிஎல உனுகொல்ல பங்களாவை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவரை உடனடியாக அங்கிருந்து வௌியேற்றுமாறு உனுகொல்ல தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (10) நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைத் தெரிவித்தார்.
வடிவேல் சுரேஷை அங்கிருந்து வௌியேற்றாமல், அநீதியாக செயற்பட்டால் தோட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இதுவாகும்.
இதேவேளை, மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க தலா 28 இலட்சம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய உதவியின் கீழ் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதன்போது தெரிவித்தார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் அனைத்து பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. R
15 minute ago
26 minute ago
33 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
33 minute ago
52 minute ago