2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வட்டவளை ஆடைத் தொழிற்சாலைக்குப் பூட்டு

Editorial   / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள்  10 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஆடைத்தொழிற்சாலை தற்காளிகமாக மூடப்பட்டுள்ளதாக  அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் பி.காமதேவன் தெரிவித்தார் 

நேற்று மாலை வெளியாகிய அறிக்கையில் நான்கு ஆண்கள்  ஆறு பெண்களுமாக 10 பேருக்கு  தொற்று இருப்பது உறுதியானது 

கடந்த 14 ஆம் திகதி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த மவுண்ட்ஜின்  தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து  அவரோடு தொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது.

இதன் அறிக்கை நேற்று மாலை வெளியாகியபோது மேற்படி பத்து பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது .

இவர்களில் நான்கு பெண்கள் வட்டவளை மவுண்ஜின் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும்  பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டுள்ள 60 பேரின் குடும்பங்களை சேர்ந்த 200 பேர் வரையில் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

மேலும் வட்டவளை ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு அங்கு வேலை செய்யும் பணியாளர்கள்  உட்பட  ஊழியர்கள்  அனைவருக்கும்  பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் முகாமையாளர் தெரிவித்தார்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X