2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு இடமாற்றம்

Freelancer   / 2023 நவம்பர் 21 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனின் சம்பவத்தினால் ஏற்கனவே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸார் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் கடமையில் இருந்தார்கள் என்ற ரீதியில் அவர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் வெளியிட்ட காணொளியில் பொலிஸ் நிலையத்தில் தனக்கு இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்து கூறியிருந்தார். இந்த காணொளியை பார்வையிட்ட பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   M 

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X