2025 ஜூலை 05, சனிக்கிழமை

வட மாகாண ஆளுநர் நியமனம்; 2ஆம் திகதி தீர்மானம்

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் நியமிக்கப்படவுள்ளதை, தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று (23) காலை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவரது நியமனம் குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆளுநராக நியமிப்பது தொடர்பிலான பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அங்கீகாரம் பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை கூட்டம் இம்முறை ஜனவரி மாதம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்,  இவரது நியமனம் தொடர்பில் தீர்மானம் அன்றைய தினம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நத்தார் விடுமுறை காரணமாக அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .