2025 ஜூலை 05, சனிக்கிழமை

வாந்தி எடுத்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

Freelancer   / 2025 ஜூலை 05 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாந்தி எடுத்து மயக்கமடைந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணம், அச்சுவேலி வடக்கு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. 

இந்தச் சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த அந்தோனிராஜன் கனிஸ்டன் என்ற குழந்தையே  உயிரிழந்துள்ளது.

மேற்படி குழந்தைக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை (03) பிற்பகல் காய்ச்சல் ஏற்பட்டதாகவும் இதனை தொடர்ந்து பெற்றோர் பனடோல்சிறப்பு வழங்கியுள்ளனர். மீண்டும் நேற்று  (04) காலை குழந்தை வாந்தி எடுத்ததை தொடர்ந்து மயக்கம் அடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து  விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை அச்சுவேலி பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையில் இறப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் பகுபாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .