Editorial / 2023 ஜனவரி 24 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பிரதான வீதியில் இன்று (24) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பகுதியிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்ற வேனும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கி பயணித்த பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதியதிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் வேன் சாரதி உயிரிழந்துள்ளதுடன், வேனில் பயணித்த ஆறுபேர் காயங்களுக்கு உள்ளாகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவித்த வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago