Freelancer / 2023 மே 07 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானத்தின் பாதுகாப்பு அதிகாரி, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட தமது துப்பாக்கியுடன் விமான நிலைய பயணிகள் போக்குவரத்து முனையத்துக்கு சென்ற போது தடுத்து நிறுத்தப்பட்டதால் விமான பயணம் சுமார் 4 மணித்தியாலங்கள் தாமதமடைந்தது.
விமானம், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு விமானத்திலும் இதுபோன்ற பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அதிகாரி தமது துப்பாக்கியை விமானத்திலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதுகாப்பு அதிகாரி விமானத்தை விட்டு வெளியேற விரும்பினால், அவர் துப்பாக்கியை விமானத்தின் தலைமை விமானியிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்தநிலையில் AI-272 என்ற இந்தியன் ஏர்லைன் விமானத்தின் பாதுகாப்பு அதிகாரியான குறித்த நபர் தமது துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலைய பயணிகள் முனையத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் அவர் திரும்பிச் செல்லும் போது, கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், இந்திய விமான பாதுகாப்பு அதிகாரியிடம் துப்பாக்கி இருப்பதை அவதானித்து அவரை தடுத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
பின்னர் குறித்த இந்திய பாதுகாப்பு அதிகாரியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும் இரு நாட்டு உயர் பாதுகாப்புத் தரப்பினர்களும், தூதரகங்களும் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து நேற்று பிற்பகல் 01.35 அளவில் சென்னை நோக்கிய பயணிக்கவிருந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலை 05.35 அளவில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்திய தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய இந்திய பாதுகாப்பு அதிகாரியின் பதவி உயர்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. R
24 minute ago
51 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
51 minute ago
2 hours ago
2 hours ago