2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

விமல் வீட்டுப் பேச்சில் மாயமான “கை”

Editorial   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள், இன்றைக்கு சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் ஒன்றுகூடினர்.

இந்த சந்திப்பின் போது ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதியில் 25 சதவீதம் மேலதிக வரி​யை அறவிடுவதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் விரிவாக கலந்துரையப்பட்டது.

அதுமட்டுமன்றி அரசாங்கத்துக்கு எதிரான பங்காளி கட்சிகளால் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடவிருக்கும் யோசனைகள் தொடர்பிலும் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அதில், நாட்டின் பொருளாதார பிரச்சினையில் இருந்து நாட்டை கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அந்த யோ​சனைகளை சமூகமயப்படுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, அத்துரலிய ரத்ன தேரர், ஜயந்த சமரவீர, கெவிந்து குமாரதுங்க, டிரான் அலஸ், வைத்திய ஜி.வீரசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதற்கு முன்னர் நடைபெற்ற கூட்டங்களின் போது, “கையை” சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர பங்கேற்றிருந்தார். எனினும், இறுதிக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X