Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 16 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
வரட்சியான வானிலை நிலவுவதால், களுத்துறை மாவட்டத்திலுள்ள பல ஏக்கர் கணக்கான சிறு தேயிலைத் தோட்டங்கள் அழிவடைந்து வருவதுடன், அவற்றில் கொளுந்து பறிப்பதை நிறுத்துமாறு, சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை மாவட்டத்துக்கான பிராந்திய முகாமையாளர் சரத் சி முதன்நாயக்க தெரிவித்துள்ளார்.
வரட்சியுடன் அதிகளவு வெப்பம் நிலவுவதையடுத்து, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, அகலவத்தை, மத்தகமை, தொடங்கொட, பேருவளை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தேயிலைத் தோட்டங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றிவந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது தொழிலை இழந்து பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago