2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வைரத்திலான விநாயகர் சிலை

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள், இந்து அமைப்பினர் வழிபாடு நடத்த உள்ளனர். இதையொட்டி விற்பனைக்காக பல்வேறு வடிவங்கள், வண்ணங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வசித்து வரும் மராட்டியத்தை சேர்ந்த மகேஷ் முரகோடா என்ற கலைஞர் வைரத்தில் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார். சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான அமெரிக்க வைரத்தில் இந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விநாயகர் சிலையின் எடை 50 கிலோ ஆகும். இந்த விநாயகர் சிலை பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் ராமநகரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் நாடபிரபு கெம்பேகவுடா மித்ரா சபை சார்பில் நிறுவப்படுகிறது. பின்னர் அந்த சிலை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .