Editorial / 2026 மார்ச் 16 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் வேலை செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்துவது குறித்த முன்மொழிவு தொடர்பாக அரசாங்கம் தனது விசேட அவதானத்தைச் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களிடம் வினவியபோது, "இந்த முன்மொழிவு உட்பட மேலும் சில ஆலோசனைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
அத்துடன், எரிபொருள் விநியோகம் தொடர்பான புதிய திட்டங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
12 minute ago
29 minute ago
45 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
45 minute ago
51 minute ago