Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 10 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவதும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 70ஆவதும் வரவு - செலவுத் திட்டம், தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.
இந்த வரவு - செலவுத் திட்டம் மீதான வாசிப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். விவசாயத்துக்காகப் பயன்படுத்தாத நிலங்களை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். கலப்பு விவசாய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.
பொருளாதார ரீதியில் பயன்படுத்தப்படாதுள்ள காணிகளை, விவசாயத்துக்காக வழங்குவோம். விவசாயத்தின் மூலம் பெறப்படும் வருவாயானது, மற்றைய நாடுகளில் பெறப்படும் வருமானத்தின் பாதித்தொகையாகும். விவசாய சமூபகார நிலையங்களை நிறுவுவோம்.
புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய நடவடிக்கைகளுக்காக 15 சதவீத வட்டி நிவாரணம் வழங்கப்படும். விவசாயத் துறைக்காக 20 ஆயிரம் ஏக்கர் காணி வழங்கப்படும்.
7 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago