Simrith / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஒன்லைன் செயலியில் அதிகளவானோர் உள்நுழைய முயன்றதால் நெரிசல் ஏற்பட்டதையடுத்து, செப்டம்பர் 31ஆம் திகதி மக்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் என திணைக்களத்தின் முன்பாக வரி செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் நின்றதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று தெரிவித்தார்.
அரசாங்கத்தின் திட்டத்திற்கு வரி செலுத்துவோர் விருப்பத்துடன் வரி செலுத்த முன்வந்துள்ளதாகவும் அது மிகப்பெரும் பலம் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
செப்டம்பர் 15 முதல் 30 வரையான காலப்பகுதிக்குள் குறித்த செயலியின் நெரிசல் காரணமாக வரி செலுத்த வங்கிகளில் பிரத்யேக கருமபீடங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழில் அதிபர் சிலர் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் கூறினார்.
தொழிலதிபர்கள் வரி செலுத்தத் தயங்கவில்லை, ஆனால் அவர்களின் வரிப்பணத்திற்கு என்ன நடக்கும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதே பிரச்சினை என்று அமைச்சர் கூறினார்.
21 minute ago
34 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
53 minute ago
1 hours ago