Editorial / 2019 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதி அனுமதிப் பத்திரம் இல்லாத பஸ் வண்டிகளால், வருடாந்தம் 200 மில்லியன் ரூபாயை அரசாங்கம் இழப்பதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாகப் பயணிக்கும் 150க்கும் மேற்பட்ட பஸ்களுள் 87 பஸ்களுக்கு நிரந்தர வீதி அனுமதிப் பத்திரம் இல்லையென்றும் இது தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலை ஊடாக சட்டவிரோதமாக பணத்தை சம்பாதிப்பதற்காக, வீதி அனுமதிப்பத்திரத்துக்கான ஒப்பந்தத்தை கோராமல், அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் இதனால், அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .