Freelancer / 2021 ஜூலை 28 , பி.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலித்தீனால் செய்யப்பட்ட விரைவில் அழியாத லஞ்ச் சீற்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் தடை செய்வதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாட்டில் இயங்கி வரும் பல்பொருள் அங்காடி சங்கிலிகளின் அனைத்து பிரதிநிதிகளுடனும் அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், ஆனால். தடை முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
“அழியாத லஞ்ச் சீற்கள் சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தினமும் 12-15 மில்லியன் லஞ்ச் சீற்கள் சுற்றுச்சூழலுடன் சேர்க்கின்றன. மனிதர்கள் பயன்படுத்தும் லஞ்ச் சீற்களில் குறைந்தது ஒரு சதவிகிதம் கூட மறுசுழற்சி செய்யப்படவில்லை. 99 சதவீதத்துக்கும் அதிகமானவை சூழலில் கொட்டப்படுகின்றன” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தடைக்கான அரசாங்கத்தின் முடிவை பல்பொருள் அங்காடி சங்கிலிகளின் அனைத்து பிரதிநிதிகளும் ஆதரித்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago