2024 மே 21, செவ்வாய்க்கிழமை

வறுமையில் இருந்து விடுவிக்க அதிக கவனம்

Freelancer   / 2023 மே 26 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மக்களை வறுமையில் இருந்து விடுவித்து, நிதிக் கொள்கைகளை வகுத்து வலுவூட்டுவதில் அரசாங்கம் எப்போதும் கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதியுடன் நிதி அமைச்சில் புதன்கிழமை (24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த குறுகிய காலத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் பின்னர், இலங்கையின் பொருளாதாரத்தில் தெளிவான ஸ்திரத்தன்மையை காணமுடிகிறது என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம், எனவும் அதனால் நாடு மீண்டும் இதுபோன்ற பொருளாதார பாதாளத்திற்கு செல்லக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலம் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், இதனால் ஒவ்வொரு தகவலையும் மக்களுடன் தொடர்புகொள்வதாகவும் விரிவாகக் கூறினார்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கவும் வெளிநாட்டு வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .