S.Renuka / 2025 டிசெம்பர் 01 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட கொழும்பு மக்களுக்கு விநியோகிக்க வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் டிசம்பர் 01, 2025 அன்று மதிய உணவை வழங்கினர்.
பாதகமான வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மக்களுக்கு டிசெம்பர் 01, 2025 அன்று மதிய உணவிற்கு பயன்படுத்தப்படும் உலர் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையின் மூத்த சிறைச்சாலை கண்காணிப்பாளர் ராஜீவ் எஸ். சில்வா, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் ஆகியோரால் கொழும்பு மாநகர சபையின் துணை மேயர் ஹேமந்த குமாரவிடம் உலர் உணவுப் பொருட்கள் இன்று (01) காலை கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் வழங்கப்பட்டன.
வெலிக்கடை சிறைச்சாலையின் ஆண் மற்றும் பெண் பிரிவுகளைச் சேர்ந்த 3874 கைதிகள் சிறை நிர்வாகத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து, தங்கள் மதிய உணவை ஏழை மக்களுக்கு வழங்கினர்.
* 750 கிலோ நாட்டு அரிசி,
* 50 பாக்கெட் தேங்காய் ,
* 100 கிலோ கொண்டைக்கடலை,
* 100 கிலோ பட்டாணி,
* 100 கிலோ பச்சைப் பட்டாணி,
* 60 கிலோ சோயா ,
* 100 கிலோ சர்க்கரை,
* 10 கிலோ தேயிலை தூள்,
* 10 கிலோ மிளகாய் தூள்,
* 30 கிலோ உப்பு
* 100 கிலோ மைசூர் பருப்பு ஆகியவை நன்கொடையாக வழங்கப்பட்டன.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், சிறை அதிகாரிகள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஆண் மற்றும் பெண் கைதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்
6 minute ago
10 minute ago
12 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
12 minute ago
12 minute ago