Editorial / 2026 பெப்ரவரி 11 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் இரு அதிகாரிகள் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹியத்தகண்டியபகுதியை சேர்ந்த நபர் கொழும்பிலுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
விடம் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ரூபாய் 50,000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
வின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (10) மாலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இந்த இரண்டு சந்தேக நபர்களும் பின்னர் தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை நிறைவு செய்ததன் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (11) அன்று சட்ட நடவடிக்கைகளுக்காக ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
6 minute ago
8 minute ago
17 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
17 minute ago
40 minute ago