Freelancer / 2026 ஜனவரி 19 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் அச்சுவேலி வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பாலத்திலுள் தடம் புரண்டது. இதில் மூவர் படுகாயமடைந்தனர்.
கார் சேற்றில் புதைந்த நிலையில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தாயும் தந்தையும், மகளும் இக்காரில் அச்சமயம் பயணித்துளனர். மகளின் கால்கள் முறிவடைந்துள்ளன எனப் பொலிஸெ தெரிவித்தனர்.
காயமடைந்த மூவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். (a)

29 minute ago
38 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
38 minute ago
56 minute ago