2026 மே 13, புதன்கிழமை

dd

வெள்ளத்தால் புத்தளம் ரயில் சேவை பாதிப்பு

Janu   / 2026 மே 13 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற காலநிலை காரணமாக நிலவும் வெள்ளப்பெருக்கினால், புத்தளம் ரயில் பாதையிலான ரயில் சேவைகள் சிலாபம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தளம் ரயில் பாதையில் அமைந்துள்ள நீலாதி பகுதியில், பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் தண்டவாளத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அப்பகுதியில் வெள்ள நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புத்தளம் பாதையிலான ரயில் சேவைகள் புதன்கிழமை (13) மாலை முதல் வியாழக்கிழமை (14) முழுவதும் சிலாபம் வரை மட்டுமே முன்னெடுக்கப்படும். புதன்கிழமை (13)  இயக்கப்படவிருந்த புத்தளம் அலுவலக ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் வரை மட்டுமே பயணிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், வியாழக்கிழமை (14)  காலை இயக்கப்பட வேண்டிய ரயில்கள் சிலாபம் ரயில் நிலையத்திலிருந்து தமது பயணங்களை ஆரம்பிக்கும். சிலாபம் மற்றும் புத்தளத்திற்கு இடையிலான ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த மேலதிக தீர்மானங்கள், நிலவும் வானிலை மற்றும் வெள்ள நிலவரத்தைப் பொறுத்து அறிவிக்கப்படும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

எனவே, புத்தளம் ரயில் பாதையை பயன்படுத்தும் பயணிகள் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்புகளைக் கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .