Janu / 2024 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாரவில , பஹல வலஹாபிட்டிய பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 23 வயதுடைய இளைஞன் ஒருவனின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டதுடன், காயமடைந்த நபர் கையை சம்பவ இடத்தில் விட்டு தப்பியோடியுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர் .
சில காலமாக நிலவி வந்த தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .
காயமடைந்த இளைஞன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , தாக்குதலை மேற்கொண்ட நபர், கீழ் வலஹாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான் 35 வயதுடையவர் என்றும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

10 minute ago
24 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
39 minute ago