2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனையில் இரு வேட்பாளர் உட்பட 3 பேர் கைது

Editorial   / 2025 மே 06 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த ஜக்கிய மக்கள் சக்தி, ஜக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேரை  செவ்வாய்க்கிழமை (06) கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி அந்நூர் பாடசாலையில வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில்  ஒரு கட்சியின் வேட்பாளர் அரவது ஆதரவாளர் உட்பட இருவர்,  வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாது இடையூறு விளைவித்ததையடுத்து வேட்பாளர் மற்று ஆதரவாளரை பொலிஸார் கைது செய்தனர்.

அதேவேளை, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராங்கேணி வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற ஜ.தே.கட்சி வேட்பாளர் ஒருவர்,   தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரி வாக்களிப்புக்கு இடையூறு விளைவித்த வேட்பாளரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்னர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X