2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்: விஜய்

Freelancer   / 2025 செப்டெம்பர் 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெல் கொள்முதல் நிலையங்களில், டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் இருந்து மூட்டை ஒன்றுக்கு 40 இந்திய ரூபா என பல கோடி ரூபாய் கொமிஷனாகப் பெறப்படுகிறது. இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று மதியம் நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்பின், மாலை 5 மணி அளவில் திருவாரூர் தெற்கு வீதியில் நகராட்சி அலுவலகம் அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதன்போது அவர் உரையாற்றுகையில்,

டெல்டா பகுதியில இருக்கற விவசாயிங்க ஒரு கொடுமைய அனுபவச்சிகிட்டு இருக்காங்க. அதுபற்றி புகார் ஒன்று வந்தது. அது என்னன்னா, இந்த மாவட்டத்துல இருக்கிற நெல் கொள்முதல் மையங்கள்ல ஒரு மூட்டைக்கு 10 ரூபா  கொடுக்கறாங்க. ஆனா, அதுக்கு மேல 40 ரூபா கொமிஷன் வாங்கறாங்க. ஒரு டன்னுக்கு 1,000 ரூபா கொமிஷன். நீங்க கணக்கு போட்டு பாத்தீங்கனா, கடந்த நான்கரை வருடங்கள்ல இந்த டெல்டா பகுதி விவசாயிங்க கிட்ட இருந்து கொமிஷனா பல கோடி புடுங்கி இருக்காங்க. இதை வேற யாராவது சொல்லி இருந்தாகூட நான் நம்பி இருக்க மாட்டேன். ஆனா, எங்கிட்ட சொன்னதே விவசாயிங்கதான். விவசாயிங்க பொய் சொல்ல மாட்டாங்க.

கேள்வி மேல் கேள்வி கேட்கிறேனே என யாரும் நினைக்காதீங்க. தீர்வைத் தேடி தீர்வை நோக்கி போவதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் லட்சியமே. எங்கள் தேர்தல் அறிக்கையில் இதை விளக்கமாக தெரிவிப்போம். இந்த பொய்யான தேர்தல் அறிக்கையை நாங்கள் கொடுக்கவே மாட்டோம். எது நடப்பதற்கு சாத்தியமோ எது உண்மையோ அதை மட்டுமே சொல்லுவோம், அதை செய்வோம் என்றார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X