Lenin Raj / 2026 மே 08 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெருவெளி வயல் பிரதேசத்தில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத துப்பாக்கியுடன் சித்தாண்டிப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கி (கட்டுத்துப்பாக்கி) ஒன்றினை பொலிஸார் கைப்பற்றினர்.
இச்சம்பவம் தொடர்பாக சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய விவசாயி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
20 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago