Freelancer / 2024 நவம்பர் 23 , பி.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் உள்ள கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது நிதிக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மதிப்பீட்டிலும் முந்தைய மதிப்பீடுகளிலும் நாங்கள் அதைப் பற்றி விவாதித்தோம். வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான ஆதாரமாகவும் உள்ளது. அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க வாய்ப்பு இருந்தாலும், நாட்டின் கையிருப்பில் கவனம் செலுத்தி அவதானமாக நிர்வகிக்க வேண்டும் என்றார். R
11 minute ago
32 minute ago
33 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
32 minute ago
33 minute ago
50 minute ago