2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வாகன சாரதிகளுக்கு தண்டப்பணம் செலுத்துவதற்கு அவகாசம்

Editorial   / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து விதிமீறல் தண்டப்பணத்தை செலுத்துவதற்கு, தபால் திணைக்களத்தால், கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  

கொவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால், வாகன தண்டத்தொகை ஆவண பணத்தை, மேலதிக தண்டப் பணமின்றி, செலுத்துவதற்கான நிவாரண காலத்தை வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபரின் உடன்பாட்டின் அடிப்படையில் நிதியமைச்சின் செயலாளரின் அங்கிகாரத்தின் கீழ், தபால் திணைக்களத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 2020 மார்ச் மாதம் 1ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் வழங்கப்பட்ட தண்டத்தொகை ஆவண பணத்தை, மேலதிக தண்டப் பணமின்றி எத்தகைய தபால் அல்லது உப தபால் நிலையங்களில் 2020.05.02 திகதி வரையில்  (இந்த  இரு  தினங்கள்  அடங்கலாக )  பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2020.02.16 ஆம் திகதி தொடக்கம் 2020.02.29ஆம் திகதி வரையில் வழங்கப்பட்டுள்ள தண்டத்தொகை ஆவண பணத்தை, அங்கிகரிக்கப்பட்ட மேலதிக தண்டப்பணத்துடன் செலுத்துவதற்கு 2020.05.02 வரையில் (இந்த 2 தினங்கள் உள்ளடங்கலாக) நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிவாரண காலம் 2020.05.02 தினம் வரையில் மாத்திரம் ஏற்புடையது என்பதால், இந்த காலப்பகுதிக்குள் குறிப்பிட்ட தண்டப் பணத்தை செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.

மேலும், ஊரடங்குச்சட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்ளது.;களுக்கான நிவாரண காலம் அந்த மாவட்டங்களிலுள்ள தபால்ஃஉபதபால் அலுவலகங்கள் திறக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்று, மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X