Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2024 செப்டெம்பர் 21 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த இளைஞர் இரண்டாக கிழித்துள்ளார்.
குறித்த நபரிடம் யாழ்ப்பாணம் தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இளைஞர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025