Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்கள் முன்னணிக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீறிவிட்டாரெனத் தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பியுமான வே.இராதாகிருஷ்ணன், வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின் இந்த அரசாங்கத்துக்கு அது சிக்கலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்றைத் தனக்கும், பதுளை மாவட்ட எம்.பியான அ.அரவிந்தகுமாருக்கு பிரதியமைச்சர் பதவியொன்றையும் வழங்குவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஏற்கெனவே இணக்கம் தெரிவித்திருந்தார். அவையிரண்டும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.
மலையக மக்கள் முன்னணியின் அடுத்தகட்ட நகர்வு தொடர்பில், மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு, ஹட்டனில் நேற்று (30) நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
“அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை எனக்கு வழங்காமைக்கான காரணம் தொடர்பில், பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அந்தப் பேச்சுவார்த்தையின் போது, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப்பதவியொன்றை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்கரமசிங்க இதன்போது உறுதிமொழி வழங்கினார். எனினும், மக்களுக்காக வேலைசெய்யமுடியாத, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப் பதவியை வழங்குவார்களாயின், அதனை பொறுப்பேற்கமாட்டேன்” என்றார்.
“தற்போதைய அரசாங்கத்தில், அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர், அந்தந்த அமைச்சுகளுக்குரிய விடயதானங்களை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடும்போது, பல்வேறான சிக்கல்கள் ஏற்பட்டன. பிரதமரும் ஜனாதிபதியும் இணைந்து செயற்படாமையால், இவ்வாறான சிக்கல் நிலைமையொன்று ஏற்பட்டது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago