2025 நவம்பர் 01, சனிக்கிழமை

வாஸின் மனு ஒத்திவைப்பு

Thipaan   / 2017 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன அவருடை மகன் ரவிந்து வாஸ் குணவர்தன உட்பட அறுவரால், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி எடுத்துக்கொள்ளவதற்கு, உயர்நீதிமன்றம், நேற்று (10) தீர்மானித்தது. 

பிரபல வர்த்தகரான மொஹமட் சியாம், கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பகுதியிலிருந்து, 2013ஆம் ஆண்டு, சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, மேற்குறிப்பிட்ட அறுவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டது. 

வாஸ் குணவர்தன அவருடை மகன் ரவிந்து வாஸ் குணவர்தன உட்பட அறுவரும் படுகொலை செய்துள்ளனர் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி ஊர்ஜிதமாகியுள்ளதாக அறிவித்த, கொழும்பு மேல் நீதின்ற நீதிபதிகளான லலித் ஜயசூரிய (தலைவர்), சரோஜினி குசலா வீரவர்தன, அமேந்திர செனவிரத்ன ஆகியோரடங்கிய ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம், அவர்களுக்கு மரணதண்டனைத் தீர்ப்பளித்தது. 

அந்தத் தீர்ப்புக்கு எதிராக, அவர்கள் அறுவராலும், உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு, தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனு, நீதியசர்களான பி.பி.அலுவிஹார, சிசிர டி அப்றூ, அனில் குணரத்ன ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில், நேற்று (10) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர்கள் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, வெளிநாடு சென்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டதுடன், பிறிதொரு தினத்தை அறிவிக்குமாறு, கோரப்பட்டது. 

அந்தக் கோரிக்கையைக் கருத்திலெடுத்த நீதியரசர்கள் குழாம், மனு மீதான விசாரணையை, செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி எடுத்துக்கொள்ளவதற்குத் தீர்மானித்தது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X