Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை – கும்புறுப்பிட்டி, நாவற்சோலை கடற்கரையில் 6 மீன்படி படகுகள் இனந்தெரியாத விசமிகளால், இன்று (16) அதிகாலை 1 மணியளவில் எரியூட்டப்பட்டுள்ளன.
இதன்போது, நான்கு படகுகள் முற்றாக எரியூட்டப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து பொதுமக்கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.
மீனவர்களுக்கு இடையிலான பகையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025