Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கஹதுடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் நேற்று (07) உயிரிழந்துள்ளனர்.
கஹதுடுவ சந்திக்கருகிலிருந்து தியகம நோக்கி மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணம் செய்த நிலையில், அருகிலிருந்த தூணொன்றுடன் மோதுண்டதில் விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 18,20 வயதுகளையுடைய இளைஞர்கள் என்பதுடன், குறித்த பிரதேசத்திலேயே வசித்து வருவபவர்களென்றும் மேலும் தெரிவித்தனர்.
மேலும் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பதுடன், பின்னாள் அமர்ந்து சென்ற இளைஞர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இருவரதும் சடலங்கள் வேதர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தனர்.
42 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
1 hours ago