2025 ஜூலை 05, சனிக்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

Editorial   / 2019 பெப்ரவரி 09 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி பகுதியில், நேற்று (08) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில், இளைஞர் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம்  -தில்லையடி, அரபா நகரைச் சேர்ந்த பாரூக் முஹம்மதுநஸ்கிம் (வயது 20) எனும் இளைஞரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளம் நகரை நோக்கி பயணித்த ஓட்டோ ஒன்று, அதே திசையில் முன்னால் சென்றுகொண்டிருந்த மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிர் திசையில் இருந்து பயணித்த கெப் வாகனம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, ஓட்டோவில் பயணித்த குறித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போதே, குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .